விதிக்கப்பட்டவை...
அந்த அறையில் எரிந்து கொண்டிருக்கும்
தீபத்திற்கு ஒப்பானது உண்மையின் வசீகரம்.
ஒற்றையாய் காரிருள் வென்றும் சலனமற்று,
இருத்தலை அமைதியாய் உணர்த்திக்கொண்டு.
அடுத்த நெருங்கிய சுற்றில்,
அதிர்ந்தெழுந்த உடலால்,
உணர்ந்தேதான் இருந்தது விட்டில்,
விதிக்கப்பட்டது விளைய இருப்பதை.
உணவிருந்தும் பசியை நீட்டிக்கும் போதை!
இன்னும் கொஞ்சம் சிறகடித்து சுழன்றது.
தொடர்ந்து எரிந்து கொண்டுதான் இருந்தது,
தீபம் மட்டும்.
Labels: Kavithaigal

4 Comments:
ரசிக்க வைக்கிறது _வரிகள் _உண்மைகளின் ரகசியம் அது
ஆனால் அந்த உணவிருந்தும பசியை நீட்டிக்கும் போதை ?
எதைக்குறித்து ?
மிக்க நன்றி. :)
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய உண்மை என அறிந்தும் ஏதோ காரணத்தால் ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிப்போடுவது...
நேரே போய் சுடரை எதிர் கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருப்பது. :)
அசத்தல் _அழகிய சொற்கோர்வை ஓர் ஓவியம் போல் மனதில் தங்கும் வரிகள்
அடிக்கடி எழுதுங்கள் _வாசிக்கத் தூண்டிவிட்டீர்கள்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home